ஆகஸ்ட் மாதத்தில் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் மூன்று முறை அத்துமீறியதாக தகவல்

ஆகஸ்ட் மாதத்தில் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் மூன்று முறை அத்துமீறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் மூன்று முறை அத்துமீறியதாக தகவல்
Published on

புதுடெல்லி,

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான சீனா, அருணாச்சல பிரதேசத்தை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி வருவதோடு, அவ்வப்போது அங்குள்ள பகுதியில் அத்துமீறி நுழைந்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் மூன்று முறை சீன துருப்புகள் இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பரஹோட்டி என்ற கிராமத்திற்குள் சுமார் நான்கு கி.மீட்டர் தொலைவுக்கு அத்துமீறி நுழைந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில், சீன ராணுவத்தின் அத்துமீறல் குறித்து கருத்து தெரிவித்த வடக்கு பிராந்திய ராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் ரன்பீர் சிங், உண்மையான எல்லைக்கட்டுபாட்டு பகுதியை அறிவதில் இரு தரப்புக்கும் இடையே வேறுபட்ட கண்ணோட்டம் இருப்பதாகவும், இரு நாடுகளின் பிரதிநிதிகளும் இந்த விவகாரத்தில் தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் 4,057 கி.மீட்டர் தொலைவுக்கு எல்லையை பகிர்ந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com