

திரிணாமுல் காங்கிரசில் எம்.பி.யாக, மந்திரியாக இருந்தபோது, சுவேந்து அதிகாரியிடம் சுபப்ரதா சக்ரவர்த்தி என்பவர் மெய்க்காப்பாளராக இருந்தார். அவர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அவருடைய மனைவி போலீசில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சி.ஐ.டி. தனிப்படை போலீசார் ஏற்கனவே சுவேந்து அதிகா வீட்டுக்கு சென்று ஆய்வு செய்தனர். 11 போலீசார் உள்பட 15 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் சுவேந்து அதிகாரிக்கு சி.ஐ.டி. போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது. அதில், 6-ந் தேதி (இன்று) கொல்கத்தாவில் உள்ள சி.ஐ.டி. தலைமையகத்தில் விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராகுமாறு கூறப்பட்டுள்ளது.