கல்யாண்சிங் கவர்னர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் - காங்கிரஸ் கோரிக்கை

ராஜஸ்தான் கவர்னர் கல்யாண்சிங் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
கல்யாண்சிங் கவர்னர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் - காங்கிரஸ் கோரிக்கை
Published on

புதுடெல்லி,

ராஜஸ்தான் கவர்னர் கல்யாண்சிங், அலிகர் நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, நாம் அனைவரும் பா.ஜனதா தொண்டர்கள், பா.ஜனதா வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று கூறினார். இதற்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜெவாலா, மதிப்புக்குரிய ராஜஸ்தான் கவர்னர் கல்யாண் சிங் ஒரு அரசியல்வாதியைப்போல் பா.ஜனதாவுக்கு வாக்கு கேட்பது அரசியலமைப்பு சட்டத்தின் அனைத்து மரபுகளையும் அர்த்தமற்றதாக்கி விடும் வகையில் அமைந்துள்ளது. இதன்மூலம் கவர்னர் அலுவலகத்தின் தரத்தையே அவர் குறைத்து விட்டார். இதனால் கல்யாண்சிங் உடனடியாக கவர்னர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது ஜனாதிபதி அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com