

புதுடெல்லி,
பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சுதன்சு திரிவேதி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
ஒத்துழையாமை இயக்கத்தின்போது வன்முறை வெடித்ததால், ஒத்துழையாமை இயக்கத்தையே மகாத்மா காந்தி கைவிட்டார். ஆனால், தற்போதைய காங்கிரஸ் கட்சியோ, சோனியாகாந்தி குடும்பத்தின் ஊழலை மறைப்பதற்கு வன்முறை போராட்டம் நடத்தி வருகிறது. அதன் வீழ்ச்சிய இது உணர்த்துகிறது.
ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவரோ, மக்களவை எதிர்க்கட்சி தலைவரோ இல்லை. அவருக்காக காங்கிரஸ் தனது பலத்தை காட்ட முயற்சிப்பது ஏன்?" என்று அவர் கூறினார்.