பிரதமர் மோடியை புகழ்ந்த ஆசாத்திற்கு காங்கிரஸ் தொண்டர்கள் எதிர்ப்பு; உருவ பொம்மை எரிப்பு

பிரதமர் மோடியை புகழ்ந்த குலாம் நபி ஆசாத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தொண்டர்கள் அவரது உருவ பொம்மையை எரித்தனர்.
பிரதமர் மோடியை புகழ்ந்த ஆசாத்திற்கு காங்கிரஸ் தொண்டர்கள் எதிர்ப்பு; உருவ பொம்மை எரிப்பு
Published on

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஜம்மு நகரில் ஜி-23 நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்பொழுது, பிரதமர் மோடி தனது கடந்த காலம் பற்றி வெளிப்படையாக பேசினார். தேநீர் விற்றவர் என்ற உண்மையை கூறினார். உலகிற்கு தன்னுடைய பின்னணியை அவர் மறைக்கவில்லை என பேசினார்.

இந்நிலையில், குலாம் நபி ஆசாத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்முவில் அக்கட்சியின் தொண்டர்கள் கோஷங்களை எழுப்பினர். அவரது உருவ பொம்மையை எரித்தனர்.

இதுபற்றி மாநில காங்கிரஸ் கமிட்டியின் பொது செயலாளர் ஷானவாஸ் சவுத்ரி கூறும்பொழுது, ஆசாத்திற்கு காங்கிரஸ் கட்சி எப்பொழுதும் அதிகம் தந்திருக்கிறது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் முதல் மந்திரியாக அவரை காங்கிரஸ் உருவாக்கியது.

ஆனால், கட்சிக்கு திரும்ப நன்மை செய்ய வேண்டிய தருணத்தில், கட்சிக்கு ஆதரவளிக்காமல் கட்சியை பலவீனப்படுத்தி கொண்டிருக்கிறார் என கூறியுள்ளார்.

சோனியா மற்றும் ராகுலின் தலைமையை கேள்வி எழுப்பும் எந்த சக்திக்கு எதிராகவும் நாங்கள் போராடுவோம் என கட்சி கொடிகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com