காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம்

காங்கிரசின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம்
Published on

புதுடெல்லி,

காங்கிரசின் அதிகாரபூர்வ வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் அஜய் மாக்கன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

காங்கிரசின் வங்கிக்கணக்கு, இளைஞர் காங்கிரசின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. வருமானவரித்துறைக்கு செலுத்த வேண்டிய 201 கோடி ரூபாய் வரியை காங்கிரஸ் கட்சி செலுத்தாததால் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கட்சியின் வங்கி கணக்குகள் வேண்டுமென்றே முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொருளாளர் அஜய் மாக்கன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், கட்சியின் வங்கி கணக்கு பெயரில் நாங்கள் கொடுக்கும் காசோலைகள் வங்கியில் நிராகரிக்கப்படுவது குறித்த விவரம் நேற்று எங்களுக்கு தெரியவந்தது. இது குறித்து நாங்கள் மேற்கொண்ட விசாரணையில் இளைஞர் காங்கிரசின் வங்கி கணக்கும் முடக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. வருமான வரித்துறை எங்களிடமிருந்து 210 கோடி ரூபாய் கேட்கிறது.

தற்சமயம் மின்சார கட்டணம், ஊழியர்களுக்கு சம்பளம், நியாய யாத்திரை தொடர்பான செலவுகளுக்கு கூட எங்களிடம் பணம் இல்லை. அனைத்து நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தேர்தல் அறிவிப்பு வெளியாக இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் எதிர்க்கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்படுவது ஜனநாயகத்தை முடக்குவதற்கு சமம்' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com