மத்தியபிரதேசத்தில் மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா

மத்தியபிரதேசத்தில் மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
மத்தியபிரதேசத்தில் மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா
Published on

போபால்,

மத்தியபிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானுக்கு கடந்த 25-ந்தேதி கொரோனா தொற்று உறுதியானதையடுத்து போபாலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதற்கு முன்பாக மாநில கூட்டுறவுத்துறை மந்திரி அரவிந்த் சிங் படோரியா கொரோனா பாதிப்புக்கு ஆளானார்.

இந்தநிலையில் மத்தியபிரதேசத்தில் மாநில நீர்வளத்துறை மந்திரி துல்சி சிலாவாத்துக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. அவரது மனைவிக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் மந்திரி பதிவிட்டுள்ளார். தனக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் என்னுடன் தொடர்புடையவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு மந்திரி தனது டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மூத்த பா.ஜ.க. தலைவர் ஜோதிர்ஆதித்ய சிந்தியா, மந்திரியும், அவரது மனைவியும் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com