கொரோனா வார்டில் கைவிலங்குடன் மது அருந்தும் குற்றவாளி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாந்து குப்தா என்பவர் கொரோனா வார்டில் கைவிலங்குடன் மது அருந்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.
கொரோனா வார்டில் கைவிலங்குடன் மது அருந்தும் குற்றவாளி
Published on

ராஞ்சி

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் பொதுமக்களை மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் சாந்து குப்தா என்பவர் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில் சிறைக்கு செல்லும் முன் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் தொற்று உறுதியானதை அடுத்து, தன்பாத்தில் உள்ள மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

சில நாட்களுக்கு முன்னர் சாந்து குப்தா கைவிலங்குடன் கொரோனா வார்டுக்குள் மது ஊற்றி குடிப்பது போன்றும், வகை வகையான உணவுகளுடன் கைவிலங்கை காட்டியபடி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் பலரும் இது குறித்து குற்றவாளிக்கு இவ்விதம் சகல வசதியுடன் அதுவும் கொரோனா வார்டில் மது கொடுத்தது யார் என்பன போன்ற கேள்விகள் எழுந்தன. கொரோனா உறுதி செய்யப்பட்ட நபருக்கு இவ்விதம் மது வாங்கி கொடுத்தது யார் எனும் கேள்வியும் இணையத்தில் அதிகம் புகைப்படங்களுடன் பரவியது.

இந்த விவகாரம் தொடர்பாக ஜார்க்கண்ட் முதல்வர் மாவட்ட நிர்வாகத்திடம் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார்.

விசாரணையில் சாந்து குப்தா மது அருந்தும் புகைப்படம் உண்மை என தெரிய வந்தது.விசாரணையில் சாந்து குப்தா மது அருந்தும் புகைப்படம் உண்மை என தெரிய வந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com