

படாவன்,
ஜம்மு மற்றும் காஷ்மீர் பற்றி கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் 21ந்தேதி சர்ச்சைக்குரிய கருத்துகளை சமாஜ்வாடி கட்சி தலைவரான முகமது ஆசம் கான் பேசினார் என குற்றச்சாட்டு எழுந்தது.
இதுபற்றி பஜ்ரங் தள தலைவர் உஜ்ஜவால் குப்தா கானுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளார். இதன் மீது நடந்த விசாரணை பற்றிய இறுதி அறிக்கை அடிப்படையற்ற உண்மைகளை கொண்டுள்ளது என கூறி 2013ம் ஆண்டில் நீதிமன்றத்தில் தள்ளுபடியானது.
தொடர்ந்து மறுவிசாரணைக்கு உத்தரவிட்டதுடன், ஊடகத்திடம் இருந்து உண்மையான தகவல் பதிவை கொண்டு வரும்படி போலீசாரிடம் கேட்டு கொண்டது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் காஷ்மீரை சேர்ந்தவர். இந்தியாவை சேர்ந்தவர் அல்ல என கூறியதற்கு காங்கிரஸ் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதேபோன்று ஜம்மு மற்றும் காஷ்மீரின் அந்தஸ்து பற்றி ஆசம் கான் கேள்வி எழுப்பியதற்காக அவர் மீது தேசத்துரோக நடவடிக்கை எடுக்க உத்தர பிரதேச பாரதீய ஜனதா வலியுறுத்தியது.
இந்த நிலையில், உள்ளூர் நீதிமன்றத்தின் தலைமை நீதிமன்ற நீதிபதி அமர்ஜித் சிங் இந்த வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். போலீசாரின் இறுதி அறிக்கையையும் அவர் நிராகரித்து விட்டார்.