

பனாஜி,
மத்திய ஆயுஷ் துறை மந்திரி ஸ்ரீபாத் நாயக்குக்கும், அவருடைய மனைவிக்கும் கடந்த புதன்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், ஸ்ரீபாத் நாயக்குக்கு காய்ச்சல் அடித்தது. இதையடுத்து, கோவா மாநில தலைநகர் பனாஜியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில், வியாழக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார்.
தற்போது அவருக்கு காய்ச்சல் குறைந்து விட்டதாக அவருடைய மூத்த மகன் தெரிவித்தார். நாயக்கின் மனைவியும் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.