மம்தா அரசுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் விமர்சனம்: மேற்கு வங்காள காங். செய்தி தொடர்பாளர் கைது

மம்தா அரசுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்த மேற்கு வங்காள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கைது செய்யப்பட்டார்.
மம்தா அரசுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் விமர்சனம்: மேற்கு வங்காள காங். செய்தி தொடர்பாளர் கைது
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சமனே பந்தோபாத்யாயா. இவரது வீடு, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் சோதேபூரில் உள்ளது. நேற்று முன்தினம் மாலை, அவரது வீட்டுக்கு சென்ற புருலியா மாவட்ட போலீசார், அவரை கைது செய்து அழைத்து சென்றனர்.

மேற்கு வங்காள மாநில அரசுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிட்டதற்காக அவர் கைது செய்யப்பட்டதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர். இதற்கு மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், இந்த கைது, சகிப்பின்மைக்கு மிகச்சிறந்த உதாரணம். கருத்து சுதந்திரம் மீது நடத்தப்பட்ட தாக்குதல். இந்த அரசியல் பயங்கரவாதத்தை கடுமையாக கண்டிக்கிறோம் என்று கூறியுள்ளார்.

ஏராளமான கிரிமினல் குற்றச்சாட்டுகள் இருப்பதால்தான், சமனே பந்தோபாத்யாயா கைது செய்யப்பட்டுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கொறடா நிர்மல் கோஷ் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com