

பெங்களூரு,
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, சிறையில் பல்வேறு சொகுசு வசதிகளை பெற்றதாக கடந்த ஆண்டு சர்ச்சை எழுந்தது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் கர்நாடக சிறைத்துறைக்கும் அம்மாநில அரசுக்கும் பெருத்த தலைவலியை ஏற்படுத்தியது. சசிகாலா சிறையில் சலுகை பெற்று வந்ததை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த போலீஸ் அதிகாரி டீ ரூபா, தற்போது பெங்களூரு (சிவில் டிபென்ஸ்) ஐஜியாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், நம் பெங்களூரு என்ற தொண்டு நிறுவனம் வழங்க இருந்த விருதை பெற ரூபா மறுப்பு தெரிவித்து உள்ளார். விருதை ஏற்க மறுத்து ரூபா, எழுதியுள்ள கடிதத்தில், இந்த விருதை ஏற்க என் மனசாட்சி இடம் தரவில்லை, ஒவ்வொரு அரசு ஊழியர்களும் நடுநிலையான சமநிலையை மட்டுமே அரசியல் அமைப்புகளிலிருந்தும், அறக்கட்டளை அமைப்புகளிடமிருந்தும் எதிர்பார்க்கிறார்கள். இதன் மூலம் மட்டுமே, மக்கள் பார்வைக்கு அரசு ஊழியர்கள் நேர்மையாக செயல்படுவதை உறுதிசெய்ய முடியும் என தெரிவித்து உள்ளார்.
பெங்களூரில் ஆண்டுதோறும் நம்ம சென்னை என்ற தன்னார்வ தெண்டு அமைப்பு அரசுப் பணியில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுக் கெடுத்து கவுரவப்படுத்தி வருகிறது. மேலும் இந்த விருதுகள் பல்வேறு துறையில் உள்ள திறமையானவர்களுக்கும் வழங்கப்படும். ரூபா நேர்மையான அதிகாரியாக இருப்பதால் அவருக்கு நம் பெங்களூரு 2018 விருது கெடுக்க தன்னார்வ தொண்டு நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. நம் பெங்களூரு 2018 என்ற தொண்டு நிறுவனம் கர்நாடக மாநில பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவரான ராஜீவ் சந்திரசேகர் என்பவரால் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.