இஸ்ரோ முன்னாள் தலைவருக்கு கொலை மிரட்டல்

இஸ்ரோ முன்னாள் தலைவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டு உள்ளது.
இஸ்ரோ முன்னாள் தலைவருக்கு கொலை மிரட்டல்
Published on

திருவனந்தபுரம்,

இஸ்ரோ தலைவராக இருந்தவர் மாதவன் நாயர் (வயது 75). இவருக்கு 2 நாட்களுக்கு முன்பு ஒரு கடிதம் வந்தது. அதில், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவு அளித்தால் கொலை செய்து விடுவோம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த கடிதம் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பெயரில் அனுப்பப்பட்டு உள்ளது.

இது குறித்து மாதவன் நாயர் கொடுத்த புகாரின் பேரில் கேரள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாதவன் நாயர் சமீபத்தில் தான் பா.ஜனதா கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com