

புதுடெல்லி,
போலீஸ் பயிற்சி மையத்தில் மது அருந்தி மற்றும் பெண் கான்ஸ்டபிள்கள் முன்னதாக ஆபாச செய்கையில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக உயர் பெண் போலீஸ் அதிகாரி தலைமைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ஜாரோடா காலானில் போலீஸ் பயிற்சி மையத்தில் பணியில் இருந்த அதிகாரி, இரு பெண் கான்ஸ்டபிள்களை தவறான முறையில் தொட்டு உள்ளார். மாலை உணவு அருந்திய போது உணவகத்தில் தவறாக நடந்து கொண்டு உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. போலீஸ் தரப்பில். பயிற்சி மையத்தில் மதுவை அருந்திவிட்டு தவறான நடத்தையில் ஈடுபட்டு உள்ளார். இதுதொடர்பாக உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிப்போம் என கான்ஸ்டபிள்கள் கண்டித்து, மன்னிப்பு கேட்க கோரிஉள்ளனர். ஆனால் போலீஸ் அதிகாரி மீண்டும் தன்னுடைய அறைக்கு சென்று மதுவை அருந்திவிட்டு பெண் கான்ஸ்டபிள்கள் இருந்த இடத்திற்கு சென்று அவர்கள் முன்னதாக ஆடையை கழற்றி ஆபாச செய்கையில் ஈடுபட்டு உள்ளார்.
இது தொடர்பாக பெண் கான்ஸ்டபிள் உயர் பெண் அதிகாரியிடம் புகார் தெரிவித்து உள்ளனர். உயர் அதிகாரிகள் மையத்திற்கு வந்த போது நிகழ்ந்தவையை அவர்களிடம் கூறிஉள்ளனர். இதுதொடர்பாக அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்ட போது குறிப்பிட்ட போலீஸ் அதிகாரி சிக்கினார். போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார், இதுதொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.