அயோத்தியில் பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் நடத்தவிருந்த பேரணிக்கு அனுமதி மறுப்பு..!

அனுமதி மறுப்பை அடுத்து பேரணியை சில தினங்களுக்கு தள்ளி வைப்பதாக பிரிஜ் பூஷன் சிங் அறிவித்துள்ளார்.
அயோத்தியில் பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் நடத்தவிருந்த பேரணிக்கு அனுமதி மறுப்பு..!
Published on

அயோத்தி,

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக மந்திரியுமான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு விளையாட்டு பிரபலங்கள், விவசாயிகள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த குற்றச்சாட்டு குறித்து பிரிஜ் பூஷண் பேசுகையில், என் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தூக்கில் கூட தொங்க தயார். உங்களிடம்(வீராங்கனைகள்) ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் சமர்பியுங்கள். நான் தண்டனை பெறத் தயாராக இருக்கிறேன் என்றார்.

இதனிடையே உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சமூகத்தில் தீயசக்திகளை விரட்டுவதற்கு மதகுருமார்களுடன் இணைந்து பேரணி நடத்தவுள்ளதாக பிரிஜ் பூஷண் தெரிவித்து இருந்தார். இந்த பேரணிக்கு தற்போது காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அனுமதி மறுப்பை அடுத்து பேரணியை சில தினங்களுக்கு தள்ளி வைப்பதாக பிரிஜ் பூஷன் சிங் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com