நாடாளுமன்ற தேர்தலுக்கு நடிகர் சன்னிதியோல் ரூ.78 லட்சம் செலவழித்தாரா? - தேர்தல் அதிகாரி அறிக்கையில் பரபரப்பு தகவல்

நாடாளுமன்ற தேர்தலுக்கு நடிகர் சன்னிதியோல் ரூ.78 லட்சம் செலவழித்தாரா என்பது குறித்து தேர்தல் அதிகாரி அறிக்கையில் பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு நடிகர் சன்னிதியோல் ரூ.78 லட்சம் செலவழித்தாரா? - தேர்தல் அதிகாரி அறிக்கையில் பரபரப்பு தகவல்
Published on

சண்டிகர்,

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், தேர்தல் செலவினங்களுக்கு அதிகபட்சமாக ரூ.70 லட்சம் வரையே செலவழிக்க வேண்டும். ஆனால் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பா.ஜனதா வேட்பாளரும், நடிகருமான சன்னி தியோல் இதைவிட அதிகமாக செலவழித்திருப்பது தெரியவந்துள்ளது.

அவரது தேர்தல் செலவின அறிக்கையை மாவட்ட தேர்தல் அதிகாரி, தலைமை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் சன்னி தியோல் ரூ.78,51,592 செலவழித்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

இதன் மூலம் அனுமதிக்கப்பட்ட தொகையை விட ரூ.8.51 லட்சம் அதிகமாக செலவழித்திருப்பதாக அதிகாரி தனது அறிக்கையில் கூறியுள்ளார். இதனால் சன்னி தியோலுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

அதேநேரம் சன்னி தியோலுக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பாளர் சுனில் ஜாக்கர் ரூ.61,36,058 தான் செலவழித்துள்ளார்.

எனினும் தேர்தல் அதிகாரியின் அறிக்கையை எதிர்த்து சன்னி தியோல் முறையீடு செய்யலாம் என தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரி வித்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com