‘ஒரே தேசம் ஒரே தேர்தல்’ குறித்து ஜூலையில் முடிவு

‘ஒரே தேசம் ஒரே தேர்தல்’ குறித்து தேர்தல் கமிஷனும், மத்திய சட்டத்துறை அமைச்சகமும் மே 16 ம் தேதி ஆலோசனை நடத்துகிறது.
‘ஒரே தேசம் ஒரே தேர்தல்’ குறித்து ஜூலையில் முடிவு
Published on

புதுடெல்லி

நாடு விடுதலை பெற்ற பிறகு 1952-ம் ஆண்டில் மட்டும் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பிறகு உருவான அரசியல் சூழ்நிலைகள், மாநில சட்டசபைகள் கலைப்பு, கவிழ்வது போன்ற காரணங்களால் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்துவதில் உள்ள ஒரு பாதகமான அம்சம் எது என்றால், அதிக செலவு. அதாவது இரண்டுக்கும் தனித்தனியே தேர்தல் நடத்தப்படுவதால் அரசாங்கத்துக்கு அதிக செலவு ஆகிறது.

எனவே நாடாளுமன்றத்துக்கும், அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் வாக்குப்பதிவை நடத்தினால் தேர்தல் செலவை பெருமளவில் குறைக்கமுடியும் என்று மத்திய அரசு கருதுகிறது. இதனை கருத்தில் கொண்டு, ஒரே தேசம் ஒரே தேர்தல் என்ற யோசனையை பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.

தற்போதைய 16-வது நாடாளுமன்றத்தின் பதவி காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைய இருக்கிறது. எனவே அதற்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தலை நடத்தியாக வேண்டும்.

ஒரே தேசம் ஒரே தேர்தல் என்ற யோசனை தற்போது ஆரம்பகட்ட நிலையில்தான் இருக்கிறது.

மாநில சட்டசபை தேர்தல்களுடன் சேர்த்து, பாராளுமன்ற தேர்தலையும் நடத்துவது தொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக தேர்தல் கமிஷனும், மத்திய சட்டத்துறை அமைச்சகமும் மே 16 ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளன.

இந்த ஆலோசனை தொடர்பான அறிக்கையை, சட்ட குழு ஜூலை மாதம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. இந்த அறிக்கை தொடர்பான ஆய்வு மற்றும் ஆலோசனைக்கு பிறகு, ஒரே சமயத்தில் மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும் பாராளுமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பாக முடிவு செய்யப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com