வீரர்கள் அடிக்கும் ஒவ்வொரு சிக்சருக்கும் சலுகை விலையில் உணவு டெல்லி ஓட்டல்கள் அறிவிப்பு

வீரர்கள் அடிக்கும் ஒவ்வொரு சிக்சருக்கும் சலுகை விலையில் சைவ-அசைவ உணவு வழங்கப்படும் என டெல்லி ஓட்டல்கள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளன
வீரர்கள் அடிக்கும் ஒவ்வொரு சிக்சருக்கும் சலுகை விலையில் உணவு டெல்லி ஓட்டல்கள் அறிவிப்பு
Published on

வீரர்கள் அடிக்கும் ஒவ்வொரு சிக்சருக்கும் சலுகை விலையில் உணவு டெல்லி ஓட்டல்கள் அறிவிப்பு

லண்டன்,

இங்கிலாந்தில் கடந்த 1-ந் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் டாப்-8 நாடுகள் பங்கேற்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டது.ஏ பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளும், பி பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளும் இடம் பெற்றன.

கடந்த 12-ந் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன. ஏ பிரிவில் இருந்து இங்கிலாந்து, வங்காளதேசமும், பி பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தானும் அரை இறுதிக்கு முன்னேறின.கடந்த 14-ந் தேதி நடந்த முதல் அரை இறுதியில் பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தையும், 15-ந் தேதி நடந்த 2-வது அரை இறுதியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. கோப்பையை வெல்வதற்கான இந்தப் போட்டியில் வீராட் கோலி தலைமையிலான இந்தியா - சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வெல்லுமா? என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்தப் போட்டியை முன்னிட்டு டெல்லியில் உள்ள சில ஓட்டல்கள் சலுகைகளை அறிவித்துள்ளது.

ராஜேந்திர பேலஸ் என்ற ஓட்டலில் 3 பெரிய திரைகளில் போட்டி ஒளிபரப்பப்படுகிறது. இதனை காண வரும் ரசிகர்களுக்கு ஓட்டல் சார்பில் இந்திய அணியின் ஜெர்சி டி-சர்ட் வழங்கப்படுகிறது. மேலும், ஆட்டத்தின்போது பாகிஸ்தான் அணியில் விழும் ஒவ்வொரு விக்கெட்டிற்கும் 5 முதல் 20 சதவீதம் வரை உணவில் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்திய அணியின் பேட்ஸ்மேன் குவிக்கும் ஒவ்வொரு பவுண்டரி மற்றும் சிக்சருக்கு சைவ மற்றும் அசைவ ஸ்டார்டர்கள் பாதி விலையில் வழங்கப்படும் என ஓட்டல் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சிக்சர் பறந்தால் பாதி விலையில் சிக்கன் உள்ளிட்ட உணவு ஐயிட்டங்கள் கிடைக்கும்.

இதுகுறித்து அந்த ஓட்டல் உரிமையாளர் கூறும்போது, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதைவிட வேறு எதுவுமே பெரியது இல்லை. நாங்கள் அனைவருமே இந்தியாவின் வெற்றிக்கு அணிவகுத்து நிற்கிறேம் என்றும் தெரிவித்தார். இதேபோல் டெல்லியில் உள்ள மேலும் பல ஓட்டல்களிலும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.



X

Dailythanthi
www.dailythanthi.com