மருத்துவ ஆக்சிஜன் தயார் நிலை குறித்து மத்திய அரசு திடீர் ஆலோசனை

மருத்துவ ஆக்சிஜன் தயார் நிலை குறித்து மத்திய அரசின் சார்பில் வர்த்தக, தொழில் மந்திரி பியூஷ் கோயல் திடீரென உயர் மட்ட ஆலோசனை நடத்தினார்.
மருத்துவ ஆக்சிஜன் தயார் நிலை குறித்து மத்திய அரசு திடீர் ஆலோசனை
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் திடீரென அதிகரித்து வருகிறது. ஒமைக்ரான் வைரசும் பரவி வருகிறது. கொரோனா இரண்டாவது அலையில் மருத்துவ ஆக்சிஜன் தேவை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவ ஆக்சிஜன் வினியோகம் ஒரு நாளுக்கு 1,000 டன்னில் இருந்து (2019 டிசம்பர்), இந்த ஆண்டு மே மாதம் 9,600 டன்னாக 10 மடங்கு அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மருத்துவ ஆக்சிஜன் தயார் நிலை குறித்து மத்திய அரசின் சார்பில் வர்த்தக, தொழில் மந்திரி பியூஷ் கோயல் இன்று திடீரென உயர் மட்டக்கூட்டம் ஒன்றைக் கூட்டி ஆலோசனை நடத்தினார்.

இதுபற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், நாட்டில் மருத்துவ ஆக்சிஜன் தயார் நிலை பற்றி ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரை வலுப்படுத்தும்விதத்தில் போதுமான மருத்துவ ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்ய பயனுள்ள வழிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது என கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com