காளி தெய்வம் பற்றி சர்ச்சை கருத்து: மம்தா கட்சி பெண் எம்.பி. மீது வழக்கு

காளி தெய்வம் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்த மம்தா கட்சி பெண் எம்.பி. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Image Courtacy: ANI
Image Courtacy: ANI
Published on

புதுடெல்லி,

காளி என்ற பெயரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் இயக்குனர் லீனா மணிமேகலை எடுத்துள்ள ஆவண பட போஸ்டரில் இந்து பெண் தெய்வம் காளி, புகைபிடிப்பதுபோல சித்தரிக்கப்பட்டிருந்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்த்ரா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது "காளிதேவியை மாமிசம் சாப்பிடுகிற, மது அருந்துகிற தெய்வமாக கற்பனை செய்வதற்கு தனி நபராக எனக்கு முழு உரிமை உள்ளது" என கூறியது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது இந்த கருத்து, அவரது தனிப்பட்ட கருத்து என கூறிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, அதற்காக கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில் மகுவா மொய்த்ரா மீது மத உணர்வை தூண்டிவிடுவதாக மத்திய பிரதேச மாநில போலீசார் இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 295-ஏ படி வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே மகுவா மொய்த்ராவை கைது செய்ய வேண்டும் என்று மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. போர்க்கொடி தூக்கி உள்ளது. அங்கு பல்வேறு தரப்பினரும் அவருக்கு எதிராக புகார்கள் அளித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 10 நாட்களுக்குள் அவர் கைது செய்யப்படாவிட்டால் கோர்ட்டை நாடப்போவதாக மேற்கு வங்காள மாநில பா.ஜ.க. கெடு விதித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com