மொபைல் போனில் 10 நாட்கள் தொடர்ந்து கேம் விளையாடியவருக்கு நேர்ந்த கதி?

மொபைல் போனில் 10 நாட்கள் தொடர்ந்து கேம் விளையாடியவர் மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
மொபைல் போனில் 10 நாட்கள் தொடர்ந்து கேம் விளையாடியவருக்கு நேர்ந்த கதி?
Published on

ஸ்மார்ட் போன்களில் வீரர் தெரியாத போர் மைதானம் எனப்படும் PlayerUnknowns Battlegrounds, also called as PUBG PUBG என்ற விளையாட்டு 2018 ஆம் ஆண்டின் மிகப்பெரிய விளையாட்டாக உள்ளது. உலகம் முழுவதும் இதனை 20 கோடி பேர் விளையாடி வருகிறார்கள்.

இந்த விளையாட்டிற்கு அடிமையான உடற்பயிற்சி ஆலோசகர் ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இந்தியாவில், ஜம்மு-வை சேர்ந்த உடற்பயிற்சி ஆலோசகர் ஒருவர் 10 நாட்களுக்கு முன்பு அவரது ஸ்மார்ட்போனில் PUBG என்ற விளையாட்டை இன்ஸ்டால் செய்து உள்ளார்.

முதல்முறையாக விளையாடிய அவருக்கு அந்த விளையாட்டு மிகவும் பிடித்து விட்டது. எனவே கடந்த பத்து நாள்களாக ஓய்வு இல்லாமல் விளையாடி உள்ளார். இதில் மனநலம் பாதிக்கப்பட்ட அவர், தன்னை தானே தாக்கி கொண்டுள்ளார்.

இதை தொடர்ந்து அவரது உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

PUBG விளையாட்டு பிரச்சினைக்கு ஆளாகும் சம்பவம் ஐம்முவில் முதல் முறை இல்லை என்றும், அந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com