கேரளாவில் வெள்ள நிவாரண நிதி முறைகேடு; சி.பி.ஐ.(எம்) தலைவர்கள் உட்பட 7 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

கேரளாவில் வெள்ள நிவாரண நிதியை தவறாக பயன்படுத்திய சி.பி.ஐ.(எம்) தலைவர்கள் உட்பட 7 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
கேரளாவில் வெள்ள நிவாரண நிதி முறைகேடு; சி.பி.ஐ.(எம்) தலைவர்கள் உட்பட 7 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
Published on

கொச்சி,

கேரளாவில் பருவமழை காலங்களில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கேரளாவின் பல பகுதிகள் பெருத்த சேதம் அடைந்தன.

கேரளாவில் வெள்ள நிவாரண நிதி திரட்டப்பட்டதில் ரூ.28 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. கேரள அரசு மற்றும் பொதுமக்களின் பணம் கொள்ளை போனது பற்றி நடந்த விசாரணையின் முடிவில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் மூவாட்டுபுழாவில் உள்ள கண்காணிப்பு நீதிமன்றத்தில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், கேரள வெள்ள நிவாரண நிதியை தவறாக பயன்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் சி.பி.ஐ.(எம்) தலைவர்கள் அன்வர், நிதின் மற்றும் கவுலாத் உட்பட 7 பேர் மீது 1,200 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com