பணப்புழக்கம் இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேட்டி

சில்லறை வணிகத்தில் பணப்புழக்கம் இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
பணப்புழக்கம் இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேட்டி
Published on

புதுடெல்லி,

டெல்லியில் தனியார் வங்கி நிர்வாகிகள் உடனான ஆலோசனைக்கு பின் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பெரிய அளவிலான நிதி நிறுவனங்களும், சிறிய அளவிலான மைக்ரோ நிதி நிறுவனங்களும் நாட்டில் மிக ஆழமாக வேரூன்றி உள்ளது. தேவை உள்ள பகுதிகளில் அவர்கள் கடன்களை நீட்டித்து வருகிறார்கள்.

அவர்கள் அனைவரும் நேர்மறையான வளர்ச்சிக்கு குரல் கொடுத்து வருகின்றனர். இது நமக்கு ஊக்கத்தை அளித்துள்ளது. இந்த கூட்டம் உற்சாகம் தருவதாக இருந்தது.

பல நல்ல தகவல்களை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சில்லறை வணிகத்தில் பணப்புழக்கம் இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை. அடுத்த 6 மாதத்தில் பொருளாதார வளர்ச்சி சீரடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com