சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி நானாவதி மரணம்

கோத்ரா கலவரம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை கமிஷனில் இடம்பெற்றிருந்த சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி நானாவதி மாரடைப்பால் குஜராத்தில் உயிரிழந்தார்.
சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி நானாவதி மரணம்
Published on

சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 1995-ம் ஆண்டு முதல் 2000 வரை நீதிபதியாக இருந்தவர் கிரிஷ் தகோர்லால் நானாவதி. இவர் இதய சயலிழப்பு காரணமாக நற்று பகல் 1.15 மணியளவில் குஜராத்தில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 86.

1935-ம் ஆண்டு பிறந்த நானாவதி, 1958-ல் மும்பை ஐகோர்ட்டில் வக்கீலாக தனது பணியை தொடங்கினார். 1979-ல் குஜராத் ஐகோர்ட்டின் நிரந்தர நீதிபதியானார். ஒடிசா மறறும் கர்நாடகா ஐகோர்ட்டுகளில் தலைமை நீதிபதியாகவும் இவர் பணியாற்றி உள்ளார்.

குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த கோத்ரா கலவரம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை கமிஷனில் இடம்பெற்றிருந்த இவர், 2014-ம் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தார். 1984-ல் நடந்த சீக்கிய கலவரம் குறித்து விசாரிக்க தசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைத்த விசாரணை கமிஷனுக்கும் தலைவராக இருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com