ஒரநாடு அன்னபூர்ணேஸ்வரி கோவிலுக்கு செல்ல அரசு பஸ் கிடைக்காமல் பரிதவித்த 200 பெண்கள்

ஒரநாடு அன்னபூர்ணேஸ்வரி கோவிலுக்கு செல்ல அரசு பஸ் கிடைக்காமல் பரிதவித்த 200 பெண்கள் தனியார் பஸ்சில் சென்றனர்.
ஒரநாடு அன்னபூர்ணேஸ்வரி கோவிலுக்கு செல்ல அரசு பஸ் கிடைக்காமல் பரிதவித்த 200 பெண்கள்
Published on

சிக்கமகளூரு-

ஒரநாடு அன்னபூர்ணேஸ்வரி கோவிலுக்கு செல்ல அரசு பஸ் கிடைக்காமல் பரிதவித்த 200 பெண்கள் தனியார் பஸ்சில் சென்றனர்.

ஒரநாடு அன்னபூர்ணேஸ்வரி கோவில்

சிக்கமகளூரு மாவட்டம் கலசா தாலுகாவில் பிரசித்தி பெற்ற ஒரநாடு அன்னபூர்ணேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கர்நாடகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்தநிலையில் நேற்று முன்தினம் ஒரநாடு அன்னபூர்ணேஸ்வரி கோவிலுக்கு செல்ல மூடிகெரே தாலுகா கொட்டிகேஹாரா பஸ் நிலையத்தில் பெண் பக்தர்கள் 200-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். அவர்கள் காலை 10 மணியளவில் வந்திருந்தனர். ஆனால், கோவிலுக்கு செல்ல அரசு பஸ் கிடைக்கவில்லை.

அரசு பஸ்சில் பெண்களுக்கு இலவசம் என்பதால் பெண் பக்தர்கள் அதில் செல்ல காத்து கொண்டு இருந்தனர். ஆனால் அரசு பஸ் மாலை 5 மணி வரை இயக்கப்பட வில்லை. இதனால் பெண்கள் என்ன செய்வது என தெரியாமல் பரிதவித்தனர்.

இதனால் அவர்கள் ஒரநாடு அன்னபூர்ணேஸ்வரி கோவிலுக்கு தனியார் பஸ்சில் செல்லும் நிலை ஏற்பட்டது.

முண்டியடித்து ஏறினர்

இதையடுத்து ஒரு சில அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. அதில் பெண்கள் முண்டியடித்து ஏறினர். இதில் ஜன்னல் வழியாகவும் ஏறினர். கூட்டம் குறையாததால் பெண்கள் மாலை 5.30 மணிக்கு மேல் தனியார் பஸ்சில் ஏறி கோவிலுக்கு சென்றனர். இதுகுறித்து பெண் பக்தர்கள் கூறுகையில், காங்கிரஸ் கட்சி அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இதனால் நாங்கள் செல்லும் இடங்களுக்கு யாருடைய தயவும் இன்றி சென்று வருகிறோம். இந்த திட்டம் எங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது. ஆனால் ஒரு சில இடங்களில் அரசு பஸ் கிடைக்காததால் அவதி அடைந்து வருகிறோம். இதனால் அரசு பஸ்களை சுற்றுலா தலங்கள், பிரசித்தி பெற்ற கோவில்கள், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கூடுதலாக இயக்க வேண்டும், என்றனர்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com