கோவா மாநில தலைமை தேர்தல் அதிகாரியை மாற்ற காங்கிரஸ் கோரிக்கை

கோவா மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி குணாலை மாற்றுமாறு கோவா காங்கிரஸ் கோரிக்கை.
கோவா மாநில தலைமை தேர்தல் அதிகாரியை மாற்ற காங்கிரஸ் கோரிக்கை
Published on

பனாஜி

கோவா மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி குணாலை மாற்றுமாறு கோவா காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

கோவா காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோடங்கர் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எழுதிய கடிதத்தில், கூறி இருப்பதாவது;-

கடந்த ஆறு ஆண்டுகளாக குணால் கோவாவின் தலைமைத் தேர்தல் அதிகாரியாக பணியில் உள்ளார். குணால் தலைமை தேர்தல் அதிகாரியாக மட்டுமில்லாமல், வேறு சில அரசுத் துறைகளின் செயலாளராகவும் பொறுப்பில் உள்ளார்.

மேலும், குணால் ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு ஆதரவாக முழுமையான சார்புநிலையை வெளிப்படுத்தியதையும், காங்கிரசுக்கு எதிராக பாரபட்சமான அணுகுமுறையைக் கொண்டிருந்ததையும் தெரிவித்த போதிலும், இந்திய தேர்தல் ஆணையம் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இத்தகைய காரணங்களால், கோவா மாநில தலைமை தேர்தல் அதிகாரி பதவியிலிருந்து குணாலை மாற்றவும் என கூறி உள்ளார்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கோவாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com