மும்பை அருகே ரெயில் பயணியிடம் இருந்து ரூ.1.71 கோடி மதிப்புள்ள தங்கம், ரொக்கம் மீட்பு

மும்பை அருகே ரெயில் பயணியிடம் ரூ.1.71 கோடி மதிப்புள்ள கணக்கில் வராத தங்கம் மற்றும் ரொக்கத்தை ரெயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் கைப்பற்றினர்.
மும்பை அருகே ரெயில் பயணியிடம் இருந்து ரூ.1.71 கோடி மதிப்புள்ள தங்கம், ரொக்கம் மீட்பு
Published on

தானே,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள டிட்வாலா ரெயில் நிலையத்தில் பயணி ஒருவரின் பையிலிருந்து ரூ.1.71 கோடி மதிப்புள்ள கணக்கில் வராத ரொக்கம் மற்றும் இரண்டு தங்க பிஸ்கட்களை ரெயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் கைப்பற்றினர்.

நேற்று முன்தினம் ரெயில் நிலைய நடைமேடையில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய கணேஷ் மோண்டல் என்ற பயணியை ரெயில்வே பாதுகாப்புப் படை கைது செய்தது. அவரது பையை சோதனை செய்ததில் கணக்கில் வராத ரூ.56 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.1,15,16,903 மதிப்புள்ள இரண்டு தங்க பிஸ்கட்களை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் லக்னோவில் இருந்து வந்துள்ளதாகவும் புஷ்பக் எக்ஸ்பிரஸில் பயணம் செய்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து ஆர்பிஎப் அதிகாரிகள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து பறிமுதல் செய்த தங்கம், மற்றும் ரொக்கத்தை அவர்களிடம் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com