பாஸ்போர்ட் ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றப்படுகிறது, முகவரியும் நீக்கப்படலாம் என தகவல்கள்

பாஸ்போர்ட்டில் முகவரி அடங்கிய இறுதி பக்கம் இல்லாமல் புதிய பாஸ்போர்ட்டை வழங்க மத்திய அரசு பரிசீலனை செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. #Passport #MEA
பாஸ்போர்ட் ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றப்படுகிறது, முகவரியும் நீக்கப்படலாம் என தகவல்கள்
Published on

புதுடெல்லி,

இந்திய வெளியுறவுத்துறை பாஸ்போர்ட்டில் முகவரி அடங்கிய இறுதிப்பக்கம் இல்லாமல் புதிய பாஸ்போர்ட்டை வழங்குவது, பாஸ்போர்ட்டின் நிறத்தை ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றுவது தொடர்பாக பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவித்து உள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.

2012-ம் ஆண்டுக்கு பின்னர் வெளியிடப்பட்ட பாஸ்போர்ட்டுகளின் தகவல்கள் அரசு கணினி தகவல் தரவில் பதிவு செய்யப்பட்டு உள்ளது, எனவே சோதனையின் போது பார்கோர்டை ஸ்கேன் செய்கையில் எளிதாக விபரங்களை தெரிந்துக் கொள்ள முடியும் எனவே, குடிமக்களின் விபரங்களை பாதுகாக்கும் முயற்சியாக வெளியுறவுத்துறை பாஸ்போர்ட்டில் முகவரி அடங்கிய இறுதி பக்கத்தை நீக்கலாம் என செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பாஸ்போர்ட்டின் இறுதி பக்கத்தை வெற்றாக விட்டுவிட முடிவு செய்யப்பட்டு உள்ளது, குடிமக்களின் விபரங்களை பாதுகாக்க இந்நகர்வு, என குறிப்பிடப்பட்டு உள்ளதாக வெளியுறவுத்துறையின் பாஸ்போர்ட்டு மற்றும் விசா பிரிவு கொள்கை மற்றும் சட்ட விவகாரங்கள் துறை துணை செயலாளர் சுரேந்தர் குமார் கூறிஉள்ளார் என செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இப்போது நீல நிறத்தில் பாஸ்போர்ட்டு வழங்கப்பட்டு வருகிறது, பாஸ்போர்ட்டு நிறத்தை ஆரஞ்சு நிறமாக மாற்றவும் வெளியுறவுத்துறை கருத்தில் கொண்டிருப்பதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இப்போது இந்திய அரசு தரப்பில் மூன்று நிறங்களில் பாஸ்போர்ட்டு வழங்கப்பட்டு வருகிறது. அரசு பணி அதிகாரிகள் மற்றும் வெளிநாடுகளுக்கு அரசு பணிக்காக செல்பவர்களுக்கு வெள்ளை நிறத்திலான பாஸ்போர்ட்டும், தூதரக அதிகாரிகளுக்கு சிவப்பு நிற பாஸ்போர்ட்டும், பிற மக்களுக்கு நீல நிற பாஸ்போர்ட்டும் வழங்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com