மைசூரு தசரா விழாவை எளிமையாக நடத்த அரசு முடிவு

பருவமழை பொய்த்து போனதால் வறட்சி நிலவுவதால் மைசூரு தசரா விழாவை எளிமையாக நடத்த அரசு முடிவு செய்திருப்பதாக மந்திரி எச்.சி.மகாதேவப்பா அறிவித்துள்ளார்.
மைசூரு தசரா விழாவை எளிமையாக நடத்த அரசு முடிவு
Published on

மைசூரு

மைசூரு தசரா விழா

கர்நாடகத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று மைசூரு தசரா விழா. நாடஹெப்பா என்று மக்களால் அழைக்கப்படுகிறது. மக்களை துன்புறுத்தி வந்த மகிஷாசூரன் என்ற அரக்கனை அன்னை சாமுண்டீஸ்வரி தேவி போரில் வீழ்த்திய வெற்றியை கொண்டாடும் வகையில் மைசூரு தசரா விழா நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

மற்றொரு தகவல் மைசூரு மன்னர் போரில் எதிரியை வீழ்த்திய வெற்றியை கொண்டாடும் வகையில் இந்த விழா நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தசரா விழா இந்த ஆண்டு அக்டோபர் 15-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை 10 நாட்கள் கோலாகலமாக நடத்த சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு முடிவு செய்திருந்தது.

மேலும் விழாவை பிரபல இசை அமைப்பாளர் ஹம்சலேகா அடுத்த மாதம் 15-ந்தேதி சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சித்தராமையா முன்னிலையில் மலர் தூவி தொடங்கிவைப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யானைகள் வருகை

விழாவையொட்டி ஜம்பு சவாரி ஊர்வலத்தில் 14 யானைகள் பங்கேற்க உள்ளன. முதற்கட்டமாக கடந்த 4-ந்தேதி 9 யானைகள் மைசூருவுக்கு வரவழைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் தசரா விழாவை பிரமாண்டமாக கொண்டாட தேவையான ஏற்பாடுகளை மாநில சமூகநலத்துறை மந்திரியும், மைசூரு மாவட்ட பொறுப்பு மந்திரியுமான எச்.சி.மகாதேவப்பா தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்து போன நிலையில் 150-க்கும் மேற்பட்ட தாலுகாக்களில் வறட்சி நிலவுகிறது. அத்துடன் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.), கபினி உள்ளிட்ட அணைகள் முழுமையாக நிரம்பவில்லை. தற்போது கர்நாடகம்-தமிழ்நாடு இடையே காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரம் தலைதூக்கி உள்ளது.

எளிமையாக கொண்டாட முடிவு

இதனால் இந்த ஆண்டு மைசூரு தசரா விழாவை எளிமையாக நடத்த கர்நாடக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக மந்திரி எச்.சி.மகாதேவப்பா தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:-

மாநிலத்தில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். எனவே இந்த ஆண்டு மைசூரு தசரா விழாவை எளிமையாகவும், அர்த்தமுள்ள வகையிலும் கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. தசரா விழா அறிவிக்கப்பட்டது போல் இசை அமைப்பாளர் ஹம்சலேகா தொடங்கிவைப்பார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

2021-ம் ஆண்டு...

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com