ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் மூலம் அதிகபட்ச வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் - பிரதமர் மோடி தகவல்

இன்று உலகின் பெரும்பகுதி முதுமை பிரச்சினையில் சிக்கி இருக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
ஆமதாபாத்,
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி நேற்று காணொலி மூலம் பங்கேற்றார்.
அதில் பேசும்போது அவர், ‘திறன் இந்தியா திட்டத்தை நாங்கள் அமல்படுத்தினோம். அதன் கீழ் கோடிக்கணக்கான இளைஞர்கள் பல்வேறு துறைகளுக்கு மனிதவளமாக தயார்படுத்தப்படுகிறார்கள். இன்று உலகின் பெரும்பகுதி முதுமை பிரச்சினையில் சிக்கி இருக்கிறது. அவர்களுக்கு இளைஞர்கள் தேவைப்படுகின்றனர். உலகுக்கு அதை வழங்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது’ என்றார்.
இன்று இளைஞர்கள் திறன்வாய்ந்தவர்களாக இருந்தால், அவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்பு சாத்தியங்கள் உள்ளன என கூறிய பிரதமர் மோடி, அவர்கள் தற்கார்பு மிக்கவர்களாக மாறுவதுடன், அதன் மூலம் சக்தி பெற்றவர்களாவும் மாறுவார்கள் என்றும் தெரிவித்தார்.
ஸ்டார்ட் அப் இந்தியா மற்றும் முத்ரா யோஜனா திட்டங்கள் வழியாக இந்திய இளைஞர்களுக்கு அதிகபட்ச வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் தனது அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.






