குஜராத்: அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து

குஜராத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது.
குஜராத்: அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து
Published on

அகமதாபாத்,

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தின் போபால் பகுதியில் 22 அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் 8-வது மாடியில் நேற்று மாலை தீடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் இருந்து சுமார் 100 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது .

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "இஸ்கான் பிளாட்டினத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் 8-வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 100 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதில் மயக்கமடைந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரும் தற்போது நலமாக உள்ளார். தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்று அதிகாரி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com