அரியானாவில் 11-ம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்தி கொலைசெய்த 9-ம் வகுப்பு மாணவன் கைது

அரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியில் 11-ம் வகுப்பு மாணவனை, நண்பர்கள் சிலர் உதவியுடன் 9-ஆம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தி கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Panchkula
அரியானாவில் 11-ம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்தி கொலைசெய்த 9-ம் வகுப்பு மாணவன் கைது
Published on

பஞ்ச்குலா,

அரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியில் அரசுப்பள்ளியில் படிக்கும் 11-ஆம் வகுப்பு மாணவனை சக நண்பர்கள் உதவியோடு 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் கத்தியால் குத்தி கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த திங்களன்று தன்னுடன் சண்டையிட்ட 11-ஆம் வகுப்பு மாணவனை, பள்ளி வளாகத்தின் வெளியில் சக மாணவர்களுடன் சேர்ந்து 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் கத்தியால் குத்தி கொன்றுள்ளான். இது தொடர்பாக மாணவனை கைது செய்துள்ளோம். சண்டையின் போது இறந்த மாணவனை காப்பாற்ற முன்வந்த 10-ம் வகுப்பு மாணவனும் தாக்குதலுக்கு உட்பட்டு படுகாயமடைந்துள்ளான். இறந்த மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். அதன் அறிக்கை வந்த பின்னர் முழு விவரங்களும் தெரியவரும். மேலும் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணையை நடத்தி வருகிறோம் எனக் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com