டெல்லியில் தொடர்ந்து 3-வது நாளாக பெய்து வரும் கனமழை

டெல்லியில் தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் கனமழை பெய்து வருகிறது.
டெல்லியில் தொடர்ந்து 3-வது நாளாக பெய்து வரும் கனமழை
Published on

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் தற்போது மழைக்காலம். இடை இடையே வெயில் அடித்தாலும் மழை பெய்யும்போது மிக அதிக கனமழையாக பெய்து வருகிறது. இதன்படி நேற்று முன்தினம் மற்றும் நேற்று காலை வேளைகளில் மீண்டும் கனமழை பெய்தது.

இடி- மின்னலுடன் நகரம் முழுவதும் பரவலாக பெய்த இந்த மழையால் ரோடுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல்வேறு இடங்களிலும் குளம்போல தண்ணீர் தேங்கியது. இதனால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

இந்நிலையில், தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் கனமழை பெய்து வருகிறது. நகரம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். தொடர்ந்து 3-வது நாளாக மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

இதற்கிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் டெல்லியின் பல பகுதிகளில் மிதமான மற்றும் பலத்த இடியுடன் கூடிய மழை நீடிக்கும் என்றும் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com