

புதுடெல்லி,
எலும்பியல் நோயால் அவதிப்படும் டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான், மேல் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளார். இந்த நிலையில், அஜய் மக்கான் நல்ல உடல் நலத்துடன் இருக்க இறைவனிடம் பிராத்திக்கிறேன் என்று பிரதமர் கோடி கூறியுள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, அன்பான அஜய் மக்கான் ஜி, நீங்கள் நல்ல உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் எனக் கூறியுள்ளார். முன்னதாக டுவிட்டர் சமூகவலைத்தளத்தில், தான் எலும்பியல் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அஜய் மக்கான் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.