

ஹிசார்,
சாமியார் ராம்பால் ஆசிரமத்தில் 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் பெண் சீடர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கிலும், ராம்பால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 13 பேர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்த வழக்கை ஹிசார் கூடுதல் செசன்ஸ் கோர்ட்டு விசாரித்தது. விசாரணை முடிவில் 14 பேரும் குற்றவாளிகள் என கண்டு, அனைவருக்கும் ஆயுள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி சாலியா நேற்று தீர்ப்பு அளித்தார். அனைவருக்கும் தலா ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.