இந்திய விமானப்படை தினம் இன்று கொண்டாட்டம் - விமானப்படை அணிவகுப்பு

இந்திய விமானப்படை தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்திய விமானப்படை தினம் இன்று கொண்டாட்டம் - விமானப்படை அணிவகுப்பு
Published on

புதுடெல்லி,

இந்திய பாதுகாப்பு படையின் ஒர் அங்கமாக இந்திய விமானப்படை உள்ளது. இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி நடைபெற்ற போது பிரிட்டிஷ் ராயல் விமானப்படையின் ஒரு பகுதியாக இந்திய விமானப்படை 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி தொடங்கப்பட்டது.

ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரமடைந்த பின்னரும் இந்தியா விமானப்படை உருவக்கப்பட்ட அக்டோபர் 8-ம் தேதியே இந்திய விமானப்படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 89-வது இந்திய விமானப்படை தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் விமானப்படை அணிவகுப்பு நடைபெற்றது. இந்திய விமானப்படையின் விமானங்கள் வானில் பறந்து விமானப்படையின் வலிமையை வெளிப்படுத்தின.

காசியாபாத்தில் நடைபெற்ற விமானப்படை தின நிகழ்ச்சியில் இந்திய விமானப்படைக்கு முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே, கடற்படை தளபதி கரம்பீர் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com