இந்தியா அதிக தடுப்பூசி வழங்குவதாக உறுதியளித்துள்ளது - வங்காளதேச மந்திரி தகவல்

இந்தியா எங்களுக்கு அதிக தடுப்பூசி வழங்குவதாக உறுதியளித்துள்ளது என்று வங்காளதேச மந்திரி ஹசன் மக்முத் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

டெல்லியில் வங்காள தேச தூதரகத்தின் பங்களிப்புடன் பங்கபந்து ஊடக மையம் திறக்கப்பட்டு உள்ளது. இந்த விழாவில் வங்காள தேசத்தின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி ஹசன் மக்முத் கலந்து கொண்டார். விழா நிறைவில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

இந்திய வங்காளதேச உறவு புதிய உயரத்தை எட்டி உள்ளது. தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களிலும் இந்தியாவுடன் உறுதியான உறவில் உள்ளோம். வங்காளதேசத்தின் தந்தையான முஜிபுர் ரஹ்மான் நினைவாக பங்கபந்து ஊடக மையம் திறக்கப்பட்டு உள்ளது அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

இந்தியா கொரோனாவை சிறப்பாக கையாண்டு வந்துள்ளது. இங்கு நிலைமை சீரடைந்ததும் கூடுதல் தடுப்பூசிகளை அனுப்புவதாக இந்தியா உறுதியளித்து உள்ளதும் இருநாடுகளின் நட்புறவை காட்டுகிறது. சீரம் நிறுவனம் மாதம் தோறும் 50 லட்சம் தடுப்பூசிகளை அனுப்பி வந்தது. ஆனால் பிப்ரவரியில் 20 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே அனுப்பப்பட்டன. அதன்பிறகு இங்கு இரண்டாவது அலை உச்சம்பெற்ற பின் இதுவரை தடுப்பூசிகள் அனுப்பப்படவில்லை. இங்கு நிலைமை கட்டுக்குள் வந்ததும் கூடுதல் தடுப்பூசிகளை அனுப்புவதாக மோடி உறுதியளித்து உள்ளார் என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com