அமெரிக்காவை முந்தியது இந்தியா: 17.2 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

இந்தியா கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்டோர் எண்ணிக்கையில் அமெரிக்காவை முந்திவிட்டது என நிதி ஆயோக் அமைப்பு தெரிவித்து உள்ளது.
அமெரிக்காவை முந்தியது இந்தியா: 17.2 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது
Published on

புதுடெல்லி,

கொரோனா பாதிப்புகளை தடுக்க இந்தியாவில் அவசரகால தேவைக்காக தடுப்பூசிகளை பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதன்படி, கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் நாட்டில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

உள்நாட்டில் உற்பத்தியான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகியவை இதற்கு அனுமதி அளிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு முதலில் தடுப்பூசிகள் போடப்பட்டன.

இந்நிலையில், நாடு முழுவதும் கடந்த மே 1ந்தேதியில் இருந்து 18 வயது பூர்த்தியான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசிடம் இருந்து இலவச கொரோனா தடுப்பூசிகள் பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நிதி ஆயோக் உறுப்பினரான டாக்டர் வி.கே. பால் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசும்பொழுது, அவர் வேர்ல்டு அமைப்பின் தரவுகளின்படி, இந்தியாவில் குறைந்தது ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசியாவது எடுத்து கொண்டவர்களின் எண்ணிக்கை 17.2 கோடி என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நம்முடைய நாட்டில், கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை எடுத்து கொண்டவர்கள் எண்ணிக்கையில் நாம் அமெரிக்காவை முந்தியுள்ளோம். கோவேக்சின் மற்றும் ஜைடஸ் ஆகிய தடுப்பூசிகள் குழந்தைகளிடம் முன்பே பரிசோதனை செய்யப்பட்டு விட்டது. நமக்கு இன்னும் 25 கோடி டோஸ்கள் தேவைப்படுகிறது என கூறியுள்ளார்.

கோவேக்சின் அவசரகால பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள காலதாமதம் பற்றி அவர் கூறும்பொழுது, நாம் கொரோனா தடுப்பூசி டோஸ் வழங்கும் பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். தகவல்களை பகிர்ந்து வருகிறோம். மைல்கல்லை எட்டி விடும் ஆவலில் உள்ளோம். தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com