

காத்மண்டு,
நேபாள நாட்டில் ராணுவ தினம் கொண்டாடப்பட உள்ளது. நேபாள நாட்டின் 250வது ஆண்டு ஒருங்கிணைப்பு உருவாக்க ஆண்டு தினமும் கொண்டாடப்பட உள்ளது. இதனை தொடர்ந்து அந்நாட்டின் ராணுவ தலைமை தளபதி ராஜேந்திர சேத்ரி, இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத்திற்கு நேபாள நாட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது அழைப்பினை ஏற்று அந்நாட்டுக்கு சென்றுள்ள ராவத் அங்கு நடைபெறும் ராணுவ தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.