

ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் மெந்தர் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இன்று காலை சந்தேகத்திற்குரிய வகையில் சிலர் ஊடுருவ முயற்சித்து உள்ளனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் இந்திய ராணுவத்தினர் அங்கு சென்றனர். இதனை தொடர்ந்து ஊடுருவல்காரர்கள் மற்றும் ராணுவமிடையே துப்பாக்கி சூடு நடந்துள்ளது. ராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதல் நடத்தி ஊடுருவல் முயற்சியை முறியடித்துள்ளனர். தொடர்ந்து தேடுதல் பணியில் வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.