கடந்த நிதியாண்டில் ரூ. 13,715 கோடி கணக்கில் வராத பணம் கண்டுபிடிப்பு

கடந்த நிதியாண்டில் வருமான வரித்துறை ரூ. 13,715 கோடியை கணக்கில் வராத பணமாக கண்டுபிடித்துள்ளது என்று அமைச்சர் கங்வார் கூறினார்.
கடந்த நிதியாண்டில் ரூ. 13,715 கோடி கணக்கில் வராத பணம் கண்டுபிடிப்பு
Published on

புதுடெல்லி

மாநிலங்கள் அவையில் எழுத்துபூர்வமான அளித்த பதிலில் 2016-17 ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இது கண்டுபிடிக்கப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் புதிதாக 1.26 கோடி வரி செலுத்துவோர் அரசின் பட்டியலில் சேர்ந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

வருமான வரித்துறை 5,102 சோதனைகளை நடத்தி ரூ. 15, 496 கோடியை கணக்கில் வராத பணமாக கண்டுபிடித்தது. அதே காலகட்டத்தில் 12,526 ஆய்வுகள் ரூ. 13,715 கோடியை கண்டுபிடிக்க உதவியது என்றார் கங்வார்.

கடந்த நவம்பர் 9 ஆம் தேதி முதல் (பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட மறுநாள்) 2017 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிவரை 1.96 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டான 2015-16 இல் 1.63 கோடி பேர் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்தனர்.

ஜனவரி 31 ஆம் தேதி துவங்கப்பட்ட ஆபரேஷன் க்ளீன் மணி திட்டத்தால் சுமார் 18 பேர்களின் ரொக்கப்பரிமாற்றமும், அவர்களின் வரி விவரங்களும் பொருந்தவில்லை என்பது கண்டறியப்பட்டது. இவற்றில் 13.33 லட்சம் கணக்குகளில் 9.27 லட்சம் பேர் பதில் அளித்தனர். இக்கணக்குகளில் ரூ. 2.89 லட்சம் கோடி தொடர்புடையதாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திட்டம் பண மதிப்பு நீக்கத்திற்கு பிறகு துவங்கப்பட்டது.

இக்கணக்குகளை அதிகாரிகளை நான்கு வகைகளாக பிரித்து வைத்துள்ளனர். சுமார் ஒரு லட்சம் கணக்குகள் உயர் சிக்கலாகவும், 7.54 லட்சம் பேர் மிதமான சிக்கலாகவும், 5.95 லட்சம் கணக்குகள் குறை சிக்கலாகவும், 3.41 இலட்சம் கணக்குகள் மிகக் குறைவான சிக்கல் உடையதாகவும் வகைப்படுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com