என்னடா நடக்கிறது இங்கே...! பட்டப்பகலில் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை

ஆசிரியர் ஒருவர் மாணவியை வலுக்கட்டாயமாக துன்புறுத்துகிறார். இந்த வீடியோ உத்தரபிரதேச காவல்துறைக்கு டேக் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டு உள்ளது.
என்னடா நடக்கிறது இங்கே...! பட்டப்பகலில் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை
Published on

மிர்சாபூர்

உத்தரபிரதேசம் மிர்சாபூரில் உள்ள கல்லூரி ஒன்றில் ஆசிரியை ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்த வீடியோவை அருணேஷ் யாதவ் என்ற டுவிட்டர் பயனாளர் பகிர்ந்து உள்ளார். "கற்பழிப்பவர்களுக்கு சுதந்திரம் வழங்கப்படுவது நமது மாநிலத்தில் துரதிருஷ்டவசமான சம்பவம் என அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார். அருணேஷ் குமார் யாதவ் இயற்பியல் பேராசிரியர், சமூக ஆர்வலர் மற்றும் கிசான் தலைவர் ஆவார்.

இந்த சம்பவம் ஐடிஐ அரசு தொழில் நிறுவன கல்லூரியில் நடந்து உள்ளது.ஒரு ஆசிரியர் ஒரு மாணவியை வலுக்கட்டாயமாக துன்புறுத்துகிறார். இந்த வீடியோ உத்தரபிரதேச காவல்துறைக்கு டேக் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டு உள்ளது.

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து உடனேயே உத்தரபிரதேச போலீசார் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரை கைது செய்தனர். மாணவியை சில்மிஷம் செய்த ஆசிரியரின் பெயர் விஜய் சிங். இவர் கட்ராவில் உள்ள ஐடிஐ கல்லூரியில் ஆசிரியராக உள்ளார். புகாரைப் பெற்ற 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டதாக மிர்சாபூர் போலீஸ் சூப்பிரெண்டு சந்தோஷ் மிஸ்ரா தெரிவித்தார். ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது இச்சம்பவம் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com