கேரளாவில் இனி குறைந்தபட்ச ஒருநாள் ஊதியம் ரூ.600 ஆக நிர்ணயம்

கேரள அரசு கொண்டுவந்துள்ள, புதிய தொழிலாளர் நலத்திட்டத்திற்கு கேரள மந்திரி சபை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
கேரளாவில் இனி குறைந்தபட்ச ஒருநாள் ஊதியம் ரூ.600 ஆக நிர்ணயம்
Published on

திருவனந்தபுரம்

சமீபத்தில் கேரள அரசு தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில், தொழிலாளர் நலத்திட்டங்களில் புதிய மாற்றங்களை கொண்டு வந்தது. இதற்கு கேரள மந்திரி சபை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த புதிய திட்டத்தில் முக்கிய அம்சமாக, தனிநபரின் ஒருநாள் குறைந்தபட்ச வருவாயை ரூ.600 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், கூலித்தொழிலாளிகள் உள்பட அனைத்து தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் உயரும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், தொழிலாளர் வங்கிகளை விரிவடையச் செய்ததன் மூலம், தொழிலாளர்களுக்கு பணி உத்திரவாதம் கிடைக்கும் வகையில் புதிய தொழிலாளர் நலத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் மற்றும் விடுதி சேவைகளும் இந்த புதிய கொள்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.

இதுவரை சுமார் இரண்டரை லட்சம் பேர் காப்பீட்டுத் திட்டத்துக்காக விண்ணப்பித்துள்ளதாக தொழிலாளர் நலத்துறை மந்திரி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com