'அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை’ குற்றச்சாட்டிற்கு ஜெட்லி பதிலடி

தற்போது நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி இருப்பதாக குற்றஞ்சாட்டியவர்களுக்கு நிதியமைச்சர் அருண் ஜெட்லி பதிலடி கொடுத்துள்ளார்.
'அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை’ குற்றச்சாட்டிற்கு ஜெட்லி பதிலடி
Published on

புதுடெல்லி

இன்று இவ்வாறு கூறுபவர்கள் இந்திரா நெருக்கடி நிலை அறிவித்த போது எங்கிருந்தனர் என்று அவர் கேட்டார்.

தனது ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் நெருக்கடி நிலை அமலில் இருந்த அந்த 19 மாதங்களில் அவர்களது வெளிப்படையான நிலைப்பாடு என்னவாக இருந்தது என்று கேட்ட ஜெட்லி எந்தவொரு அரசையும் சாதாரணமாக அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை என்ற விமர்சனத்துடன் அணுகுவது ஓர் வழக்காகிவிட்டது என்று சாடினார் அவர்.

இவ்வாறு கருத்திடுவோரில் பெரும்பாலோர் நெருக்கடி நிலையை ஆதரித்தோ அல்லது அதற்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்காமலோ இருந்தவர்களே என்றார் ஜெட்லி. இந்திரா காந்தி 42 ஆண்டுகளுக்கு முன்பு நெருக்கடி நிலையை அமல்படுத்திய சூழல்களை விவரித்தார் அவர். உச்ச நீதிமன்றம் கூட சிறையிலிருக்கும் கைதிகளுக்கு நிவாரணம் எதையும் நெருக்கடி நிலையின் போது வழங்க இயலாது என்று கூறியது. பத்திரிக்கை அலுவலகங்களில் அமர்ந்திருந்த தணிக்கை அதிகாரிகள் எந்தவொரு அரசு எதிர்ப்பு செய்தியையும் பிரசுரிக்க விடவில்லை என்று குறிப்பிட்டார் ஜெட்லி.

அரசியல் ரீதியிலான விளைவுகளையும் குறிப்பிட்ட அவர் சர்வதிகாரமே முற்றிலும் நிலவி வந்தது என்று விவரித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com