ஜெருசலேம் பயங்கரவாத தாக்குதல் - பிரதமர் மோடி கண்டனம்

ஜெருசலேம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
Jerusalem terror attack - Prime Minister Modi condemns
Published on

புதுடெல்லி,

இஸ்ரேலின் ஜெருசலேமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

"இஸ்ரெல், ஜெருசலேமில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். பயங்கரவாதத்தை அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் இந்தியா கண்டிக்கிறது. பயங்கரவாதத்திற்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொண்ட கொள்கையில் இந்தியா உறுதியாக நிற்கிறது" இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com