கர்நாடக முதல்-மந்திரி வருகை; போக்குவரத்தை சரிசெய்ய பைக் ஓட்டுநரை எட்டி உதைத்த போலீஸ் அதிகாரி

போலீஸ் அதிகாரியின் அத்துமீறிய செயலுக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடக முதல்-மந்திரி வருகை; போக்குவரத்தை சரிசெய்ய பைக் ஓட்டுநரை எட்டி உதைத்த போலீஸ் அதிகாரி
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் மைசூரு அருகே சுட்டூரில் நடைபெற்ற விவசாய கருத்தரங்கு நிகழ்ச்சியில் அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு சித்தராமையா அங்கிருந்து புறப்பட்டபோது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து மைசூர் காவல் கண்காணிப்பாளர் மல்லிகார்ஜுன் பாலதண்டி, பேக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்பேது பைக் ஓட்டுநர் ஒருவர் கோட்டை கடக்க முயன்றதால் ஆத்திரமடைந்து அவரை காலால் எட்டி உதைக்க முயன்றார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைராக பரவிய நிலையில், போலீஸ் அதிகாரியின் அத்துமீறிய செயலுக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com