மகளை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி: 150 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி

போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மலப்புரம்,

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த 49 வயது கூலித்தொழிலாளி மனைவி மற்றும் 17 வயது மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இதில் 17 வயது சிறுமியும் அவரது தாயாரும் அந்தப்பகுதியில் தனியாக வசிக்கின்றனர். சிறுமியின் தாயார் கூலி வேலைக்கு சென்று வருகிறார். சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

கடந்த 2022-ம் ஆண்டு சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது தந்தை பெற்ற மகள் என்றும் பாராமல் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதேபோல் 2 முறை அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மலப்புரம் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.

மலப்புரம் கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கு நேற்று விசாணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளிக்கு 150 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் இதில் ரூ.2 லட்சத்தை பாதிக்கப்பட்ட சிறுமியின் எதிர்கால நலனுக்கு பயன்படுத்த வேண்டும் என்று அவர் தனது தீர்ப்பில் கூறி இருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com