கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டியை சந்தித்து நலம் விசாரித்த மந்திரி வீணா ஜார்ஜ்...!

கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டியை மருத்துவமனையில் சந்தித்து கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் நலம் விசாரித்தார்.
கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டியை சந்தித்து நலம் விசாரித்த மந்திரி வீணா ஜார்ஜ்...!
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம், நெய்யாட்டின்கராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி பிப்ரவரி 7 திங்கள்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார். அவரை சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் வெள்ளிக்கிழமை மருத்துவமனைக்குச் சென்று சந்தித்து நலம் விசாசித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவின்படி உம்மன் சாண்டியை மருத்துவமனைக்குச் சென்று உடல்நலம் குறித்து விசாரித்தேன். ஏற்கெனவே முதல்-மந்திரி , உம்மன் சாண்டியின் மகனை நேற்று அழைத்து அவரது மகள் மற்றும் மருத்துவர்களைச் சந்தித்தார். மருத்துவமனையில் டாக்டர் மஞ்சு தலைமையில் அமைக்கப்பட்ட மருத்துவக் குழு அவருக்கு சிகிச்சை அளிக்கும் என்றார்.

இதனிடையே உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் தனது முகநூல் பதிவில், தனக்கு நிமோனியா லேசாக ஆரம்பமாகி இருப்பதாகவும், அதிக காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் முதல்-மந்திரி பினராயி விஜயன், நேரில் அழைத்து உம்மன் சாண்டியின் உடல்நிலை குறித்து விசாரித்ததற்கு அவர் நன்றி கூறினார்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com