கேரளாவில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவு இன்று வெளியீடு

கேரளாவில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருவனந்தபுரம்,

கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால், கேரளாவில் கொரோனா பரவலுக்கு இடையே எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 பொது தேர்வுகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. தற்போது பிளஸ்-2 செய்முறை தேர்வுகள் நடந்து வருகிறது.

இந்தநிலையில் கேரள பள்ளி கல்வித்துறை மந்திரி வி.சிவன் குட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேரளாவில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 4.12 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். தற்போது விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெற்றதையடுத்து தேர்வு முடிவு இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படுகிறது என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com