கேரள ரெயிலில் தீ வைத்த வழக்கு: குற்றவாளிக்கு மனநல பாதிப்பு இல்லை - மருத்துவ பரிசோதனையில் தகவல்

கைது செய்யப்பட்ட ஷாருக் சைஃபிக்கு மனநல பிரச்சினைகள் எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
கேரள ரெயிலில் தீ வைத்த வழக்கு: குற்றவாளிக்கு மனநல பாதிப்பு இல்லை - மருத்துவ பரிசோதனையில் தகவல்
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் எலத்தூர் ரெயிலில் பயணிகள் மீது தீ வைத்து எரித்தது சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஷாருக் சைஃபி மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

இதையடுத்து ஷாருக் சைஃபியை 4 பேர் அடங்கிய மருத்துவர்கள் குழு பரிசோதித்தது. இதில் ஷாருக் சைஃபியின் உடல் மற்றும் மனநலம் விரிவாக ஆராயப்பட்டதில், அவருக்கு மனநல பிரச்சினைகள் எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி விசாரணையை அவர் தவறாக வழிநடத்த முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ஷாருக் சைஃபி விய்யூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com